Menu

இரட்டைக் கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளின் பின்னர் திறப்பு

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

 

இந்த தாக்குதலில், மூவாயிரம் பேர் உயரிழிந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

 

தாக்குதலின் போது இரட்டை கோபுரங்கள் இடிந்து வீழ்ந்த நிலையில், அதன் அருகே இருந்த சுரங்க ரயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்திருந்தது.

 

ரயில் நிலையத்தின் பல பகுதி மண்ணுக்குள் புதைந்தமையால், ரயில் நிலையம் மூடப்பட்டது.

 

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரயில் நிலையம் சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தற்போது ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, இரட்டைக் கோபுர தாக்குதலில் பாதிப்படைந்திருந்த ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

 

குறித்த பகுதியில், மீண்டும் ரயில் சேவை தொடங்கியதை மக்கள், கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon