Menu

அமெரிக்க ஓபின் டென்னிஸ் ஆடவர் பிரிவில், நொவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார்

அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டைச் சோர்ந்த நொவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில் எதிர் கொண்டார்.

 

இந்த போட்டியில் ஜோகோவிச் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

 

இதுவரை ஜோகோவிச் மொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளதுடன் ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon