Menu

ஆவுஸ்திரேலிய கடற்படையின் கூட்டு பயிற்சியில் முதன் முறையாக சீனா..!!!!

ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற கூட்டுக் கடற்படையின் இராணுவப் பயிற்சியில் சீனா உட்பட 27 நாடுகள் பங்கேற்றுள்ளதாக ஆவுஸ்திரேலிய இராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

ஆவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள போர்ட் டார்வின் பகுதியில் கடற்படையின் இராணுவப் பயிற்சியில் சீனா முதன் முறையாகப் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதில் வௌ;வேறு நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் இந்த பயிற்சி நடவடிக்கைகளுக்காக 23 கப்பல்கள கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சி மூலம் நாடுகளுக்கிடையே நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள், மற்றும் ஒற்றுமைகள் என்பன பரஸ்பரமாக புரிந்துகொள்ள கூடியதாக உள்ளதாகவும் ஆவுஸ்திரேலிய இராணுவ படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடற்படையின் இராணுவப் பயிற்சியானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15-ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் அதிகரித்து வரும் நிலையில்  ஆவுஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டுப் கடற்படை பயிற்சியில் சீனா கலந்து கொண்டுள்ளமையுயானது பல்வேறு கேள்விகளை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon