Menu

பால் பொதிகளில் விசம் கலந்தமை உறுதி செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை.!!!

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆர்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பொதிகளில் விசம் கலந்தமை உறுதி செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தள்ளார்.

 

கடந்த 5ம் திகதி இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு விசம் கலந்து பால் பைக்கற்று வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பூஜித ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பூஜித ஜயசுந்தர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள், தனது கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பூஜித ஜயசுந்தர மேலும் தெரிவித்தள்ளார்.

 

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் ஆர்பாட்டமானது கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon