Menu

ரவி கருணாநாயக்கவுக்கு விரைவில் அமைச்சுப் பதவி.!! பிரதமர் உறுதி..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவுக்கு விரைவில் அமைச்சுப் பதவி வழங்கப்படுவது தொடர்பில், தீர்கமான முடிவு எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

 

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடன் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதற்கமைவாக, தனது வியட்நாமிற்கான விஜயத்தின் பின்னர் இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ரவி கருணாநாயக்க முக்கிய அங்கம் வகித்துள்ளதாக தெரிவித்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அவருடைய அமைச்சு பதவியை பறித்துள்ளமையால் ஐக்கிய தேசியக் கட்சியானது கொழும்பில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

எனவே உடனடியாக ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சு பதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தள்ளனர்.

 

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் வியட்னாமிற்கான விஜயத்தின் பின்னர் தீர்மானிப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பாக கலந்துரையாட உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon