Menu

நடுவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட செரீனாவிற்கு 17 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் 17 ஆயிரம் அமெரிக்க டொலர்; அபராதம் விதித்துள்ளது.

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார்

 

இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை திட்டியுள்ளதுடன், செரீனா , 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டு;ள்ளார்.

 

செரீனா வில்லியம்ஸின் பயிற்சியாளர், சைகை மூலம், ஆட்ட நுணுக்கம் பற்றி விமர்சித்துள்ளார்.

 

இரண்டாவதாக டென்னிஸ் மட்டையை செரீனா வீசி எறிந்தமை தொடர்பில், நடுவர் புள்ளியைக் குறைத்திருந்தார்.

 

3 ஆவதாக புள்ளியைக் குறைத்த நடுவரை கடுமையான் வார்த்தைகளால் செரீனா வில்லியம்ஸ் திட்டியிருந்தார்.

 

இந்நிலையில், செரினாவின் இவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் செரீனா வில்லியம்ஸிற்கு மொத்தமாக 17 ஆயிரம் டொலர் அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக 13 கோடி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon