Menu

உலக நாடுகள் மியான்மருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.!!

ரோகிங்யா அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு உலக நாடுகள் மியான்மர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வலியுறுத்தியுள்ளார்.

 

வாங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஷேக் ஹசினா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

ரோகிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதால் வங்காளதேசத்தின் வளங்கள், மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்த வங்காளதேச பிரதமர்

 

ஆனால் தாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் 7 லட்சத்திற்கும் ஆதிகமான அகதிகள் மியான்மரில் இருந்து வாங்காளதேசத்திற்கு வந்துள்ளதாகவும் வங்காளதேச பிரதமர் மேலும் தெரிவித்தள்ளார்.

 

எனவே அவர்களை பராமரிப்பதானது வங்காளதேச அரசாங்கத்திற்கு சிரமமாக உள்ளதாகவும் ஷேக் ஹசினா குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் தற்போது மியான்மரில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஷேக் ஹசினா  எனவே ரோகிங்யா அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு உலக நாடுகள் அனைத்தும் மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon