Menu

வவுனியாவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.!!!

வவுனியாவில் 2018ம் ஆண்டின், இது வரையான காலப்பகுதியில் 36 பேர் தற்கொலை செய்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.

 

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

 

அதன் போது வவுனியா மாவட்டத்தில் தற்கொலை செய்யப்படும் விகிதம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே இணைத்தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் அண்மைக்காலமாக தற்கொலை அதிகளவில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்  எனவே அதனை கட்டுப்படுத்துவதற்காக சமூக மட்டத்திலும் மற்றும் பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon