Menu

கிம் ஜாங்கை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப்

வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில், அணுவாயுதங்கள் இன்றி, இராணுவ அணிவகுப்பை நடத்தியமைக்காக வட கொரிய ஜனாதிபதியை அமெரிக்க ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

 

வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி ஏற்பட்டதன், ஆண்டு விழா ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

 

இந்த ஆண்டு விழாவில், இராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமைவதுடன், இராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு வடகொரியா ஒப்புக்கொண்டது.

 

குறித்த ஒப்புதலுக்குப் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையோ நடத்தவில்லை.

 

இந்த நிலையில், வடகொரியாவின் 70-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், இராணுவ அணிவகுப்பின் போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை.

 

பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே வடகொரியாவின் இராணுவ அணிவகுப்பில் இடம்பிடித்திருந்தன.

 

இந்நிலையில், ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்திய வட கொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாராட்டியுள்ளதுடன் , நன்றியும் தெரிவித்துள்ளார்.

 

வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறாமல் ராணுவ அணி வகுப்பு நடத்தப்பட்டமை வடகொரியாவின் மிகப்பெரிய நேர்மறையான நடவடிக்கை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

கிம் ஜாங் உன்னிற்கும் தனக்கும் இடையில் மோதல் உருவாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon