Menu

அதிக பணம் படைத்தவர்களில் கனடா ஐந்தாம் இடம்.!!!

உலகிலேயே அதிக பணம் படைத்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளது.

 

வெல்த் எக்ஸ் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்தினைக் கொண்டவர்களின் எண்ணிக்கைகளை கணக்கிடும் போது உலகிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட 5ஆவது நாடாக கனடா

 

விளங்குவதாகவும் வெல்த் எக்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

கனடாவில் அண்ணளவாக 10 ஆயிரத்து 840 குடியிருப்பாளர்கள், 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள குடியிருப்பாளர்கள் சொத்துக்களை கணிப்பிட்டே இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆய்வு நடவடிக்கையானது வருடாந்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள வெல்த் எக்ஸ் நிறுவனம் முதல் நான்கு இடங்களில் , அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon