Menu

7 பேரையும், விடுதலை செய்யும் விடையத்தில் திமுக இரட்டை வேடம்.!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமரான ரஜீவ் காந்தியின் கொலை வழக்கின் குற்றவாளிகளான 7 பேரையும், விடுதலை செய்யும் விடையத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

 

பாஜக வளர்ச்சிக்காக தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற அடிப்படை பணிகளை தேசியத் தலைவர் பாராட்டியுள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளான 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன்

 

எனவே விடுதலை தொடர்பான சட்ட விதி முறைகளுக்கு உட்பட்டு, எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ஆளுநர் எடுப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் திமுகவினர் ஆட்சியில் இருந்த போதும் மற்றும் மத்தியில் கொங்கிரஸ் கட்சி ஆட்சியில் அங்கம் வகித்திருந்தபோதும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Right Menu Icon