Menu

நல்லாட்சியில் கருத்து சுதந்திரம் தாராளம் என்கிறார்.!!

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கான கருத்து சுதந்திரம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளதென நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுக்கோரல தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் பெண் சிறைக்கைதிகள், சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு, தற்போது கருத்து சுதந்திரம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தலதா அதுக்கோரல மேலும் தெரிவித்துள்ளார்.

 

எனவே நல்லாட்சியில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக எவராலும் குற்றஞ்சாட்ட முடியாது என்றும் தலதா அதுக்கோரல குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்த தலதா அதுக்கோரல கடந்த கால அரசாங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்காக மனித உரிமை மீறல்களுக்கு புறம்பாக செயற்பட்டு 27 சிறைக்கைதிகளை படுகொலை செய்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இரத்தினபுரி ஹெலபன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே தலதா அதுக்கோரல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon