Menu

ஆசியக் கிண்ண போட்டியில் இருந்து தினேஷ் சந்திமல் விலகல்.!!!

சர்வதேச ஆசியக் கிண்ணப் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தினேஷ் சந்திமல் விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தள்ளது.

 

எதிர்வரும் 15 ஆம் ஆரம்பமகவுள்ள சர்வதேச ஆசியக் கிண்ணப் போட்டிகளில் தினேஷ் சந்திமல் விளையாட மாட்டார் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் இருபதுக்கு 20 லீக் பேட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே தினேஷ் சந்திமல் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

 

அண்மையில் ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களின் தெரிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் தினேஷ் சந்திமலின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இருப்பினும் சந்திமலின் கை விரலில் ஏற்பட்ட காயம் இதுவரை முழுமையாக குணமடையாத காரணத்தால் அவர் தொடரில் வெளியேறியுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தள்ளது.

 

இந் நிலையில் சந்திமலுக்குப் பதிலாக 16 பேர் கொண்ட இலங்கை குழாமில் நிரோஷன் திக்வெல்லவின் பெயர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையுத் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon