Menu

இந்தியா அரசியலமைப்பு தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.!!!

இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்காக உருவாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பினை, நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா, தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயத்தின் போது இலங்கை நாடாளுமன்றக் குழுவினர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் மலையகத்திற்கான இந்திய வீடமைப்பு திட்டங்களை விரிவுப்படுத்தவும், மற்றும் விரைவுபடுத்தப்படவும், இந்திய அரச தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக கல்வி, கலாசார, மற்றும் சமூக விவகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon