Menu

ஐ.நா கூட்டத்தொரில் இலங்கை விவகாரங்களை மூடி மறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சி.!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது என, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் காப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷெரின் அப்துல் சரூர் தெரிவித்துள்ளார்.

 

ஜெனீவாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டதன் பின்னர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே ஷெரின் அப்துல் சரூர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

சிரியா, மற்றும் மியன்மார் போன்ற நாடுகளின் விடயங்கள் அண்மைக்காலமாக ஐ.நா.வின் பேசுபொருளாகியுள்ளதாக தெரிவித்த ஷெரின் அப்துல் சரூர் இதனால் இலங்கை விவகாரம் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன், இலங்கையில் நீதிக்கான பொறிமுறை ஏற்படாத சூழ்நிலையே காணப்படுவதாகவும் இதனை ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கே தாம் ஜெனீவாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் ஷெரின் அப்துல் சரூர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், ஐ.நா.வின் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டதாக கூறி, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொரில் இலங்கை விவகாரங்களை மூடி மறைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கலாம் என்றும் ஷெரின் அப்துல் சரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

எனவே அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது என்றும் ஷெரின் அப்துல் சரூர் மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon