Menu

பிரேசில் சிறைச்சாலையில் மர்மகுழு அட்டகாசம்- 92 பேர் தப்பியோட்டம்

பிரேசில் சிறைச்சாலை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய கும்பலொன்று அங்கிருந்த பொலிசாரைச் சுட்டுக் கொன்று, 92 கைதிகளை தப்பிக்க வைத்துள்ளது.

 

பிரேசிலின்,; ரொமேயூ கான்கேல்வ்ஸ் அப்ரான்டெஸ் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்கள் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

 

இதனால்,அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும், அதி பாதுகாப்பை மீறி சிறைக்குள் புகுந்த 20 பேர் கொண்ட கும்பல், வெடி குண்டுகளை வெடிக்க வைத்து சிறைச்சாலைக் கதவுகளை உடைத்து நொருக்கியது.

 

பின்னர் உள்ளே புகுந்த கும்பலுக்கும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற பொலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதில் பொலிசார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இந்த சந்தர்பத்தில் அங்கிருந்த 92 கைதிகள் வரை தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களில், 41 பேரை பொலிசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும் சிறையில் இருந்து தப்பிச் சென்ற ஏனைய கைதிகளைத் தேடும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச அளவில் சிறை கைதிகள் அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரேசிலில், 7 லட்சத்து 26 ஆயிரத்து 712 கைதிகள் சிறை கைதிகளாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon