Menu

கிளாரிங்டன் பகுதியில் துப்பாக்கி சுடு இருவரை தேடும் பொலிசார்..!!

கிளாரிங்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை தேடி வருவதாக டர்ஹாம் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவமானது பழைய ஸ்க்யுகோக் வீதி மற்றும் கஸ்டசன் வீதி அருகாமையில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவத்தின் போது 29 வயது மதிக்க தக்க ஒருவர், தூப்பாக்கி சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார், குறிப்பிட்டுள்ளனர்.

 

உயிராபத்தான காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும் அங்கு உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறும் டர்ஹாம் பிராந்திய பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon