Menu

இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 464 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.!!!

லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி இலக்காக 464 ஓட்டங்களை, இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் திகதி ஆரம்பமாகியது.

 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

 

முதலாவது இனிங்சில் இங்கிலாந்து அணியானது 332 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது முதலாவது இனிங்சில் 292 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

அதன் பின்னர் இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணியானது நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை எடுத்திருந்தது.

 

அத்துடன் இன்று நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பமாகியது. இன்றைய துடுப்பாட்டத்தின் போது இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அலஸ்டைர் குக் 147 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

 

அத்துடன் இங்கிலாந்து அணியின் தலைவரான ஜோ ரூட் 125 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

 

இறுதியாக 112.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 423 ஓட்டங்களை எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

 

இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 464 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது 18 ஓவர்கள் நிறைவில் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

 

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தவான் மற்றும் இந்திய அணித்தலைவரான விராட் கோலியும் ஓட்டங்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon