Menu

கேரள வெள்ளப்பெருக்கிற்கு தமிழகம் காரணமில்லையாம் அறிக்கையில் தகவல்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணம் அல்ல என மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு, மத்திய நீர் ஆணையம் அறிக்கை வழங்கியுள்ளது.

 

கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகத் தண்ணீர் திறக்கப்பட்டதே காரணம் என கேரள மாநில முதலமைச்சர், பினராயி விஜயன் குற்றம்சாட்டியிருந்தார்.

 

இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு வந்தபோது 3 முறை எச்சரிக்கை விடப்பட்டு, படிப்படியாகவே தண்ணீர் திறக்கப்பட்டது என விளக்கமளித்திருந்தார்.

 

இந்நிலையில் கேரள வெள்ளப்பெருக்கிற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்திய மத்திய நீர் ஆணையம் 48 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

 

அதில், ஓகஸ்டு முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கேரளாவில் வழக்கத்தை விட சுமார் 500 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி கூடுதலாக பதிவாகியிருந்தமையே வெள்ளப்பெருக்கிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

மேலும், கேரள வெள்ளப்பெருக்கிற்கு முல்லைப்பெரியாறு அணையோ அல்லது வேறு அணைகளோ காரணம் இல்லை என தெரவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அணைகள் சரியான நேரத்துக்கு திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தவறானது என மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon