Menu

கனடாவில் மைக்டொனால்ட் உணவகத்தின் வெளியே கத்திக்குத்து

லெஸ்லிவில் பகுதியில் அமைந்துள்ள மைக்டொனால்ட் உணவகத்திற்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.

 

ஜெராட் தெரு கிழக்கு மர்யோரி அவன்யூ பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

குறித்த பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக , பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த தகவலைத் தொடரந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், கத்திக்குத்திற்கு இலக்கான இருவரை மீட்டுள்ளனர்.

 

20 வயதுடைய இளைஞர் ஒருவர் மீதும், 40 வயதுடைய பெண் ஒருவர் மீதுமே கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon