Menu

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் ஆடம்பரகார்களுக்கு தடை- பிரதமரின் அதிரடி முடிவு

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக ஆடம்பர கார்கள், அதிநவீன கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை ஒரு வருடத்திற்கு தடை விதிக்கலாம் என பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.

 

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ள நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

 

இந்தக் கூட்டத்தின் போது, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதனால், அதிக அளவில் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

 

இதனால் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதை சமாளிப்பதற்கு சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

எனினும், நாடு எவரையும் சார்ந்து இருக்ககூடாது என்றும், சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

அதன்படி ஆடம்பர கார்கள், நவீன கையடக்க தொலைபேசி, பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஒரு வருடத்திற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

 

தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானில் 66 ஆயிரம் கோடி பற்றாக்குறை காணப்படுவதுடன், ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் 33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிசெய்ய முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon