Menu

ராஜிவ் கொலைக்குற்றவாளிகளை விடுவிக்க காங்கிரசிற்கு விருப்பமில்லை

முன்னாள், பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 -ஆம் ஆண்டுஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

 

இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்பட 7 பேரும் 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இன்று வரை 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

 

இவர்களை விடுதலை செய்யவேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் பேரறிவாளனை உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்பு வழங்கியுள்ளத.

 

இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யலாம் என முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ஆத்துடன், இது பரிந்துரையாக ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மீது எந்தவித சமரசமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின், செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

 

தன் நண்பனான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தீவிரவாதிகளை ஆதரிப்பது தான் மோடி அரசின் கொள்கையா என்றும் காங்கிரஸ் கட்சியின், செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கேள்வியெழுப்பியுள்ளார்.

 

பாஜகவின் கூட்டணியான அதிமுக அரசும், பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்ய முயற்சி எடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்

'திறன் இந்தியா' திட்டத்தின் துாதர்களாக...

Leave a Reply

Right Menu Icon