Menu

இந்தியாவில் எரி பொருட்களின் விலைகள் அதிகரித்தமைக்கு மத்திய அரசாங்கம் பொறுப்பல்ல.!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் உற்பத்திகள் குறைவடைந்து வருவதால், இந்தியாவில் எரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளதாலேயே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எனவே இந்த விலை ஏற்றத்தினை மத்திய அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக தெரிவித்த ரவிசங்கர் பிரசாத் அதன் காரணமாக பெட்ரோல், மற்றும் டீசலின் விலையானது இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து கேரளா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா, மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon