Menu

மக்களின் வரியில் அதிகளவு கல்விக்கே செலவாகிறது.- அகிலவிராஜ்காரியவசம்

நாட்டு மக்களிடமிருந்து அறவிடப்படும் வரியில் கூடுதலான தொகையை பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் தேசிய இறைவரி ஆணையாளர் நதி திசாநாயக்க எழுதிய ‘அழகியதோர் நாளையதினம்’ என்ற தமிழ் புத்தகத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வின் போதே கல்வியமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டு;ளார்.

 

கூடுதலான தொகையை பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் செலவிடுகின்ற நிலையில், இந்த விடயம் குறித்து சிந்தித்து கல்விச் செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்குமாறு அமைச்சர் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மக்களிமிருந்து அறவிடப்படும் வரியின் மூலமே பாடப்புத்தகம், சீருடை, காப்புறுதி உட்பட சகல வசதிகளும் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.

 

வரி செலுத்தாது நிவாரணங்களை வழங்குவதனால், மாத்திரம் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது சிரமம் என்றும், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon