Menu

முன்னாள் போரளியின் குடும்பத்தினர் மீது பொலிஸ் அதிகாரி காட்டுமிராண்டித் தாக்குதல்- நீதி வேண்டி இன்று போராட்டம்

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான 14 வயது மாணவிக்கு நீதி வேண்டி கனகராயன் குளம் பாடசாலை மாணவர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

 

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியின், குடும்பத்தினர், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை உணவகம் அமைத்து விற்பனையில் ஈடுபடுவதற்காக கொடுத்துள்ளனர்.

 

இதில் குறித்த உணவக உரிமையாளர், காணி உரிமையாளருடன், கடந்த ஞாயிற்றுக் கிழமை வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிசாருன் சென்று காணி உரிமையாளருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இதன் போது சிவில் உடையில் இருந்த வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கணவன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளைத் தாக்கியுள்ளார்

 

இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 வயது மாணவிக்கு பொலிஸ் அதிகாரி வயிற்றில் உதைந்ததையால் இரத்தப் போக்கு ஏற்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 

இதனைக் கண்டித்தே இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்று,

பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேறியே ஊரை விட்டு வெளியேறு,

சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே,

முன்னை நாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா

 

 

போன்ற வாசகங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இவ்வார்ப்பாட்டத்தில் கனகராயன்குளம் பாடசாலை மாவணவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுஸ்ரீரன் மற்றும் கனகராயன்குளம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கனகராயன்குளம் வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்ட இடத்திற்குச் சென்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தென்னக்கோன் விசாரணையின் அடிப்படையில் சிறந்த தீர்வினைப் பெற்றுதருவதாக உறுதிமொழி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon