Menu

பொலிசாரின் அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில் பொலிசாரே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கனகராயன் குளத்தில் விருந்தினர் விடுதி ஒன்றை நடாத்துவதற்காக தனது சொந்த காணியை குத்தகைக்கு வழங்கியிருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும், பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த சம்பவமானது பொலிஸ் பொறுப்பதிகாரியின் முறையற்ற வன்முறை செயலை என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 

குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது காணி உரிமையாளரால் வழக்கு தொடரப்பட்டுள்ளமையானது சட்ட வரை முறைகளுக்கு உட்பட்டவை என்றும் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிசாரின் கடமை என்றும் ஆனால் குறித்த பொலிஸ் அதிகாரி வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

அத்துடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிப்பதாகவும் சிவஞானம் சிறீதரன் மெலும் தெரிவித்துள்ளார்.

 

மண்ணுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த போராளிகள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்றய சூழலில் பொலிஸார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல என்றும் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த சம்பவத்தினை திட்டமிட்ட செயலாகவே கருதமுடியும் என தெரிவித்த சிவஞானம் சிறீதரன் பொலிஸாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவ்வாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon