Menu

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் பலியானோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு.!!!

ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 68 ஆக உயர்வடைந்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொது மக்களை குறி வைத்து, பயங்கரவாதிகள் சமீபகாலமாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், நேற்று நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மொமதாரா மாவட்டத்தில் காவல் துறை அதிகாரி ஒருவரை பணி நீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதன் போது பங்கரவாதி ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாகவும் தெரிவிக்க்ப்படுகின்றது.

 

இந்த தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

 

அத்துடன் அதிகமான பொது மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில் இன்று வரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக நங்கர்ஹார் பொது சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

 

அத்துடன் இன்னமும் 128 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon