Menu

கனடாவில் ஸ்கூட்டரை செலுத்திச் சென்ற 70 வயதுப் பெண் விபத்தில் பலி

எத்தோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 70 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக ரொரண்டோப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்தச் சம்பவம், நேற்றுப் பிற்பகல், 6.30 மணியளவில், 6 ஆவது தெரு லேக்சோர், ப்ளுவாட் மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

விபத்தில் உயிரிழந்த பெண், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போதே விபத்தினை எதிர்கொண்டு;ள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் விபத்துடன் தொடர்புடைய மற்றைய வாகனத்தின் சாரதி, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon