Menu

சென்னை –சேலம் நெடுஞ்சாலை திட்டத்தில் நீடிக்கும் குழப்பம்

சென்னை- சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் திடீரென மாற்றப்பட்டுள்ளதுடன், கையகப்படுத்தும் நிலத்தின் அளவு மற்றும் நிதி என்பனவும் குறைக்கப்பட்டுள்ளது.

 

சென்னை சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் மத்திய, மாநில அரசின் உதவியுடன் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

இத்திட்டத்தில் 277.3 கி.மீ தூரத்தை 10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றுவதாக அறிவிக்கப்பட்டது

 

அத்துடன், இந்த திட்டத்திற்காக அரசாங்கம் விவசாய நிலங்களை கைப்பற்றியிருந்தது.

 

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளசவில் பாதிக்கப்பட்டதுடன் விவசாய நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

 

மேலும் இது குறித்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கில் நீதிமன்றம் அரசை கடுமையாக எச்சரித்திருந்தது.

 

மேலும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் அரசாங்கம் செயற்பட்டால் குறித்த திட்டத்தையே தடை செய்ய நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் எட்டுவழிச்சாலை திட்டத்தை அரசு மாற்றியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில், மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை இத்திட்டத்தில் மாற்றம் செய்து மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

 

10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதுடன், கல்வராயன் மலையை பாதிக்காதவாறு செங்கம் – சேலம் வீதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

வனப்பகுதியில் திட்டமிடப்பட்ட 300 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 103 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

பசுமை வழிச்சாலையின் அகலம் 90 மீட்டர் என முன்னர் இருந்த நிலையில் தற்போது அது 70 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon