Menu

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் கனேடிய பிரதமருடன் நேரடி பேச்சுவார்தை.!!!

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் கனேடிய பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

நேற்றையதினம் இடம்பெற்ற அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இந்த ஒப்பந்தம் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நேருக்கு நேர் சந்தித்து பேசவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் இந்த நேரடி பேச்சுவாரடத்தையே மிகவும் அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அமெரிக்க மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் கடந்த மாதம் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மாற்றுவதற்கான புதிய ஒப்பந்தத்தை உருவாக்கியிருந்தனர்.

 

அத்துடன் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூன்றாவது நாடான கனடாவை புதிய ஒப்பந்தத்தில் சேர்த்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon