Menu

இளம் வயதில் ரிஷப் பந்தின் சாதனை- இந்திய அணி சாதனை

இந்திய அணியில், குறைந்த வயதில் விக்கெட் காப்பாளராக சதமடித்த சாதனையை இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், ரிஷப் பந்த் படைத்துள்ளார்.

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

 

இதில் 464 என்ற கடின வெற்றி இலக்குடன் இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் விளையாடியது.

 

இதில். இந்திய அணியின் விக்கெட் காப்பாளர், ரிஷப் பந்த் சதமடித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் ரிஷப் பந்த் சதமடிப்பது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்த இந்தியர்கள் வரிசையிலும் ரிஷப் பந்த் இணைந்து கொண்டுள்ளார்.

 

மிகவும் குறைந்த வயதில் சதமடித்த இளம் இந்திய விக்கெட் காப்பாளர்கள், வரிசையில் அஜய் ராத்ராவை தொடர்ந்து இரண்டாவதாக ரிஷப் பந்த் இடம் பிடித்துள்ளார்.

 

மற்றொரு சாதனையாக, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய விக்கெட் காப்பாளரில், ரிஷப் பந்த் முதலிடம் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையையும் ரிஷப் பந்த் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon