Menu

இந்திய மகளீர் கிரிக்கெட் அணி வெற்றி.!!!

இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளீர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

இந்தியா மற்றும் இலங்கை மகளீர் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது 3 ஒருநாள் போட்டிக்ள் மற்றும் ஜந்து ரி20 போட்டிகளில் விளையாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது நேற்றைய தினம் இலங்கையின் தென்மாகாணத்தில் அமைந்துள்ள காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

 

நாணயசுழற்றியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

 

அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணியானது 35.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அணி சார்பாக, அணித்தலைவியான சமாரி அத்தப்பத்து அதிகபட்ச ஓட்டமாக 33 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ஜோஷி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

 

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய மகளீர் அணியானது 19.5 ஓவர்கள் நிறைவில் 100 ஓட்டங்களை எடுத்து, 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நாளையதினம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon