Menu

பொலிசாரின் வாகனத்தை கடத்திய யாழ் கும்பல்- திணறிய பொலிசார்

யாழ்- கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்திளை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், இன்று காலை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ் கொடிகாமம் பொலிசார், நேற்று இரவு பொலிசாரின் வாகனத்தில், மணல் கடத்தல்கார்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

 

இதன் போது வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பொலிசாரின் வாகனத்தை அந்தப் பகுதியில் நின்ற குழுவில், ஒருவர் கடத்திச் சென்றுள்ளதாக பொலிசார்
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிசாரின் வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

இந்நிலையில் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் நேற்று இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதுடன், இன்று காலை கொடிகாமம் பொலிஸாரினால் நால்வர், கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பொலிஸாரின் வாகனமும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வாகனம், கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள பகுதியில், மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியிருந்த நிலையிலே பொலிசாரின் வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon