Menu

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை.!!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நிலை நாட்டியுள்ளார்.

 

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

 

இதில் இரண்டாவது இனிங்சில் இந்திய வீரரான சமியை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் ஆண்டர்சன் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

 

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள மெக்ராத்தின் சாதனையை ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.

 

ஆவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத், 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள அதேவேளை பந்து வீச்சாளர்களின்தரவரிசையில் 4ம் இடத்தில் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இங்கிலாந்து வீரரான ஆண்டர்சன் 143 டெஸ்ட் போட்டிகளில் 564 விக்கெட்டுக்களை வீழ்த்தி தற்போது 4ம் இடத்தை பிடித்துள்ளார்.

 

இதேவேளை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளவர்களின் தரவரிசை பட்டியலில் இலங்கை அணி வீரரான முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன் முதலாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது   ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பிரசல்ஸில் இடம்பெற்ற 22வது கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது   2018 இன் பிற்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிநிலையின் போது ஜனநாயக கட்டமைப்புகள் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை கருத்தில்கொண்டு இலங்கையில் நல்லாட்சி மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தனது முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இந்த சந்தப்பில் மனித உரிமைகளும் நல்லிணக்கமுமே முக்கியமான நிகழ்ச்சி நிரலாக காணப்பட்ட இந்த இரு விடயங்கள் குறித்து தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது என இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் குறித்து ஆராயப்பட்டு வருவதை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச தராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தற்போதைய சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அனைத்து சூழ்நிலையிலும் மரணதண்டனையை பயன்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஓன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Right Menu Icon