Menu

ஜப்பான் ஓபின் பட்மிண்டனில் அடுத்த சுற்றுக்கு தயாரான பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் பட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

ஜப்பான் ஓபன் பட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று ஆரம்பமானது.

 

இந்தப் போட்டிகள், 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், போட்டியில் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்குபற்றியுள்ளனர்.

 

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

 

தொடக்க நாளான நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 13-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகஹாஷியை சந்தித்தார்.

 

53 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-17, 7-21, 21-13 என்ற செட் கணக்கில் சயகா தகஹாஷியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பி.வி சிந்து 2-வது சுற்றில் சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Right Menu Icon