Menu

லிபியாவில் படகு விபத்து 100 பேர் பலி..!!!

லிபியாவில் அகதிகள் பயணித்த படகு, விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லிபியாவின் கடல் பகுதியில் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 அகதிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

 

லிபிய கடல் பகுதியிலிருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை பயணித்த இரண்டு படகுகளில்; ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இந்த விபத்தை தொடர்ந்து லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

அத்துடன் 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon