Menu

கனடாவில் தந்தையைக் கொலை செய்து தப்பியோடிய மகன் பொலிசாரால் கைது

எத்தோபிக்கோப் பகுதியில், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

மார்டின் க்ரோவ் வீதி மற்றும், ரெட் க்ரேவ் றைவ் பகுதியில், நேற்றுப் பிற்பகல் 4 .30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக பொலிசர் தெரிவித்துள்ளனர்.

 

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் இருவரும் கத்திக் குத்திற்கு இலக்காகியுள்ளனர்.

 

எனினும் தந்தையை பலத்த காயங்களுடன் அவசர மீட்புக் குழுவினர் மீட்ட போதிலும் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிசார், 20 வயதுடைய மகன் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

எனினும் குறித்த நபர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon