Menu

மன்னார் மனித புதைகுழியல் தொடர்ந்து வெளிவரும் மனித எச்சம்

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் அகழ்வுப் பணிகள் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்க்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

 

இன்று 69 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்றுள்ளன

 

விசேட சட்டவைத்திய அதிகாரியின் தலைமையில் இன்று அகழ்வு பணிகள் நடைபெற்றுள்ளன.

 

இன்று அகழ்வு பணிகளுக்கு அமைவாக தற்போதைய நிலையில் 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம் பெற்றுள்ளது.

 

அத்துடன் குறித்த புதை குழி பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon