Menu

நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்காது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

நல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ட நீதி கூட நிலைநாட்டப்படாது என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசாங்கம் இராணுவத்தை காப்பாற்றும் செயற்பாட்டிலேயே மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே, எந்தவொரு காலக்கட்டத்திலும் விசாரணைகள் என்பது நடத்தப்படவும் மாட்டாது என்றும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியும் கிடைக்காது எனத் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon