Menu

இணையத்தில் வெளியான விஜயின் படம்

விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

 

இந்தப் படத்தில், சமந்தா கதாநாயகியாக நடித்திருந்ததுடன், நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடித்திருந்தார்.

 

இந்தப் படத்தில், நகைச்சுவை நடிகராக சதீஷ் நடித்திருந்ததுடன், கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார்.

 

கத்தி திரைப்படம், விவசாயிகளின் வலியை எடுத்துக் கூறும் திரைப்படமாக அமைந்திருந்தது.

 

அனிருத் இசையமைப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் கத்தி திரைப்படத்தை தயாரித்தது.

 

கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் லைகா புரொடக்ஷன் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், லைகா புரொடக்ஷன் ‘கத்தி’ படத்தை, தற்போது யூ டியூபில் முழுவதுமாக வெளியிட்டுள்ளது .

 

இந்தப் படத்துக்குப் பின்னர், ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்திருக்கும் ‘சர்கார்’ படம், வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

“சர்கார்” சிங்கிள் டிராக் – படக்குழு அறிவிப்பு

நடிகர் விஜய் நடிக்கும் "சர்கார்" படத்தின்...

Leave a Reply

Right Menu Icon