Menu

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தும் விஜயகாந்த்

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என தேமுதிக ;தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்து ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.

 

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக முடிவு எடுத்து ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

 

இந்நிலையில், இந்த 7 பேரின் விடுதலை தொடர்பாக தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என விஜயகாந், தெரிவித்துள்ளார்.

 

ஆனாலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகாலமாக சிறைதண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என தேமுதிக தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

குறித்த 7 பேரும் பல வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்துள்ள நிலையில், இதனை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்;டும் என விஜயகாந் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon