Menu

நித்தி தலைமறைவு.!!பொலிசார் தேடுதல் வேட்டை.!!

இந்தியாவின் பிரபல ஆண்மீகவாதியான நித்யானந்தாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தொடரந்து அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

அவரது ஆச்சிரமத்தில் உள்ள பெண் பக்தர்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

நித்யானந்தா நடத்திவருகின்ற ஆசிரமத்தில் தங்கியுள்ள பெண் பக்தர்களை நித்யானந்தா பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் எனவே அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நித்யானந்தாவின் சீடரான லெனின் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு முறைப்பாடு செய்துள்ளார்.

 

இவ்விடையம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள அதேவேளை இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

 

இந்நிலையில் கடந்த 6ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நித்யானந்தா முன்னிலையாகாத நிலையிலேயே நீதிபதி நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யுமாறு தீப்பு வழங்கியுள்ளார்.

 

அத்துடன் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

அதனை அடுத்தே நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் கர்நாடகாவில் உள்ள நித்யானந்தாவின் ஏனைய ஆச்சிரமங்களிலும் பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக...

Leave a Reply

Right Menu Icon