Menu

இலங்கையின் தற்போதைய ஆட்சி முறை உலகிற்கு எடுத்துக்காட்டு.!!!

இலங்கையில் தற்போது இடம்பெற்று வருகின்ற ஆட்சியானது உலகிற்கே முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

உலகில் முதல் தடவையாக ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து நாட்டை நிருவகித்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

வியட்நாமில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பபட்டுள்ளது.

 

எனினும் அவ்வாறான எந்த ஒரு கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெற்று வருகின்ற ´ஏசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உத்தியேகபூர்வ விஜயத்தினை வியட்நாமிற்கு மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon