Menu

துடுப்பாட்டம் வீக் இதனாலே இந்தியா தோல்வி என்கிறார்.!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளமைக்கு துடுப்பாட்ட வீரர்களே காரணம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான சேவாக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் நிலையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் இதன் காரணமாகவே இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா இழந்தமைக்கான பிரதான காரணம் என்றும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என்ற கணக்கில் இழந்துள்ளமை யாவரும் அறிந்ததே.

 

இந்திய அணிதலைவரான விராட் கோலியே அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையிலேயே இந்தய வீரர்கள் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இவ்விடையம் தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்திலேயே சேவாக் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு தனது வாழ்த்துக்களையும் சேவாக் தெரிவித்துள்ளார்.

 

எனினும் இந்திய வீரர்களான ரிஷப் பந்த், மற்றும் லோகுஷ் ராகுல் ஆகியோர் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடியதாகவும் சேவாக் மேலும் தெரிவித்தள்ளார்.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon