Menu

இரத்த களரியாக மாறும் சிரியா.!! அந்தோனியோ குட்ரஸ் கவலை!!

சிரியாவின் இட்லிப் மாகாணம் இரத்த களரியாக மாறுவதற்கு அனுமதிக்க கூடாது என ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சியாளர்களின் இறுதி வசமாக உள்ள இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசாங்கம் மற்று ரஷ்யாவும் உக்கிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் தாக்குதல்களினால் பொதுமக்களில் பலரும் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள இட்லிப் மாகாணத்தில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அந்தோனியோ குட்ரெஸ்

இதில் அதிகமான பொதுமக்கள் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அங்கு சிக்கிக் கொண்டுள்ள மக்களை அப்பகுதியிலிருந்து மீட்க வேண்டும் என்றும் இட்லிப் மாகாணம் இரத்தக்களரியாக மாற அனுமதிக்கக் கூடாது என்றும் அந்தோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் பொதுமக்கள் பலியாவை தடுப்பதற்கு ரஷ்யாவும், ஈரானும் வழி வகை செய்யவேண்டும் என்றும் அந்தோனியோ குட்ரெஸ் மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon