Menu

போதைப் பொருட்களை உற்பத்தியில் இந்தியாவும் உள்ளது. !!ட்ரம்ப் குற்றசாட்டு!!

சட்டவிரோதமான போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் 21 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

சட்ட விரோதமாக போதைப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றினை பிற நாடுகளுக்கு கடத்தும் நாடுகளில் இந்தியா உள்ளடங்குவதாகவும் டெனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்தள்ளார்.

 

போதை பொருட்களை கடத்தும் ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மியான்மர், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முக்கிய நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கொலம்பியா, மெக்சிகோ, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களின் உற்பத்திகள் அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் டெனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் மெக்சிகோவிலிருந்து கடத்தப்படுகின்ற ஹெராயின் மற்றும் கொலம்பியாவிலிருந்து கடத்தப்படுகின்ற கோகைன் போன்ற போதை பொருட்களினால்; அமெரிக்காவில் ஆண்டுத்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதாகவும் டெனால்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்கா தொடர்ந்து சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் டெனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon