Menu

எதிர்கட்சியாக செயற்படுவதிலும் கொங்கிரஸ் கட்சி தோல்வி என்கிறார் பிரதமர்..!!!

இந்தியாவில் எதிர்கட்சியாக செயற்படுவதிலும் கொங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து விட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உடனான கலந்துரையாடலின் போதே நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி பொறுப்பில் இருந்து கொங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டிருந்ததாகவும் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் தமது கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் மூலம் கொங்கிரஸ் மற்றும் அவர்களது பங்காளிகட்சிகள் பற்றிய உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எதிர்க்கட்சி என்ற வகையிலும் கொங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக கொங்கிரஸ் கட்சி எந்த கவலை இல்லாமல் இருந்துவிட்டு தற்போது தேர்தல் நெருக்கு வேளையில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon