Menu

ஒன்ராறியோவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி.!!

ஒன்ராறியோவின் அன்கஸ்ரர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாமில்டன் பொலிசார் தெரிவித்தள்ளனர்.

சன்ஃபிளவர் பெருநகரத்திற்கு அருகில் உள்ள வீடோன்றிலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவமானது நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹாமில்டன் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் பலமுறை துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து தமக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவித்த ஹாமில்டன் பொலிசார்

சம்பவ இடத்திற்கு சென்ற போது ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஹாமில்டன் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon