Menu

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியானது 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.

 

ஒருநாள் தொடரை இந்திய மகளீர் அணி 2-1 என கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று நடைபெற்றது.

 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

 

அதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளீர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது.

 

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 155 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது தோல்வியடைந்துள்ளது.

 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

 

அத்துடன் இரு அணிகளுக்கிடையிலான 2-ஆவது ரி20 போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon