Menu

ஆசிய கிண்ண போட்டியில் இந்தியாவை கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான்.!!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியானது வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

 

அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஷஹ்சாத் 124 ஓட்டங்களையும் மொஹமட் நபி 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

 

253 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ராகுல் மற்றும் ராயுடு ஆகியோர் களமிறங்கினர்.

 

இவர்கள் இருவரும் இணைந்து 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது இந்திய அணி முதலாவது விக்கெட்டை இழந்தது.

 

இதன் பின்னர் இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

 

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 252 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

 

இதனால் இப் போட்டி வெற்றிதோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லசித் மாலிங்கவின் சாதனை.!!

அனைத்து வகையிலான சர்வதேச கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon